ஒதுக்கப்பட்டவன்
கை கோர்த்து கண் கலங்கிஅழுதபடி என்னை அழாதே என்றவள் நீ!
இன்று அழுகை மட்டுமே
எனக்கு வரமாய் தரும் தேவதையானாய்..
காலை வந்தனம் சொல்லி
உன் பாதம் சமர்ப்பித்த
என் இதயப் பூக்கள்
உன்னால் ஏற்றுக்கொள்ளப்படாமலே
வாடிப்போகின்றன!
உன்னிடமிருந்து
கடிதம் வந்தது
கனவு போலிருக்கும்
சாபம் எனக்கார் தந்தது?
எத்தனை நாள்
எப்படி இருக்கிறாய்
எனக்கேட்க மாட்டாயா
என ஏங்கிச் செத்திருக்கிறேன்?
காத்திருந்து கண்டவுடன்
கட்டியணைக்க கை விரிக்கும்
என்னைக் கடந்து போகும்
கல்மனது உனக்கெப்படி வந்தது?
ஆற்றாமையில்
அடிமனம் கதறும்
ஆண்டவா எனக்கேன்
ஆக்கினை செய்தாய் இப்படியென..
ஆயினும் அதிலுமோர்
ஆறுதல் எனக்கு..
உன் கோபத்துக்கெல்லாம்
சொந்தக் காரன் நான் மட்டும்தானே!
*********
விடியல் ராகம்
ஓர் இனியகாலையில்
முழங்கால் கட்டி
முகம் புதைத்து
ஏதோ சிந்தனையில்
சாளரம் வழியே
பார்த்துக் கொண்டிருக்கும்
உன்னைப் பார்த்தபடி நான்..
உன் கணிணியில் மெலிதாய் கசிகிறது பாடல்
புல்லாய்ப் பிறவி தர வேண்டுமென
என்மனது வேண்டியது
உன் பல்லாய்ப் பிறவிதரவேண்டுமென..
ஆம்..எத்தனை விதமாய்
உன் அனுமதியின்றி
உன் இதழ் சுவைக்கிறது அது.
*********
நல்ல காலம்!
அந்தக் காலம் போல்
கல்லைத் தூக்கவேண்டும்
காளையை அடக்க வேண்டுமென
எனக்கு விதித்திருந்தால்
நீ எனக்குக் கிடைக்காமலே போயிருப்பாய்!
ஒற்றைப் பார்வையில் விழுத்தி என்னை
உனக்குள் அடக்கியவளே!
உனக்கெப்படி நன்றி சொல்வேன்?
********
தாலாட்டு!
தூக்கம் பிடிக்காத ஓர் இரவில்
பாட்டாவது கேட்டபடி
தூங்கலாம் என முயற்சிக்கையில்..
மெலிதாய்க் கசிந்தது பாடல்..
கண்ணோ கமலப்பூவென...
உன் அம்மா இப்படித்தான்
உன்னைத் தாலாட்டி இருப்பாள்
என்ற உன் நினைவில்
முற்றாய்த் தூக்கம் தொலைந்து போனது!
*****
9 comments:
காதலின் வலியை கண்ணியமாய் சொன்ன
வரிகள் அழகு ......கவியும் அழகு
நல்லாயிருக்கு சார்... word verification??
புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)
http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html
அழகழகு வரிகள்.வாழ்த்துக்கள்
ellame nalla irukku.. i really cant write apart from my thought.. but u r really great..
அய்யா! இது இப்போ? இப்போத்தான் பாக்குறேன்!
பிரபாகர்.
சாரி. இது பேகப் ப்ளாக்:))
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment